மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;
திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட குழுமாயி கரையில் கடந்த மாதம் 9-ந் தேதி நின்று கொண்டு இருந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,500-ஐ பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வெற்றிச்செல்வம் (வயது 27) என்பவர் மீது வழக்குபதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் வெற்றிச்செல்வம் குமரன்நகர் பகுதியில் 2 வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்பு கொண்டு, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர் தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபடுவதும், ஆயுதங்களை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதையும் வாடிக்கையாக கொண்டு இருந்ததால் அவருடைய குற்ற நடவடிக்கை தடுக்கும் பொருட்டு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வெற்றிசெல்வத்திடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.