கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறுவனை கடத்திய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;

Update: 2022-08-16 16:28 GMT

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே அக்கராயாப்பாளையம் பொட்டியம் சாலையில் வசித்து வரும் லோகநாதன்-கவுரி தம்பதியின் மகன் தருண் ஆதித்யா(வயது 4). சம்பவத்தன்று இவனை நள்ளிரவில் வீடு புகுந்து கடத்தி சென்று ரூ.1 கோடி கேட்டு மிரட்டியது தெடார்பாக கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த டேனியல் மகன் ஈஸ்டர்ஜாய், ராஜகவுண்டர் மகன் சுந்தர சோழன், கல்வராயன்மலை சுண்டைக்காய்பாடி கிராமத்தை சேர்ந்த சகாதேவன் மகன் ரகுபதி, அருணாச்சலம் மகன் அருள்செல்வன் ஆகிய 4 பேரை கச்சிராயப்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கைதான 4 பேரையும் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் ஈஸ்டர்ஜாய் உள்பட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் 4 பேரிடமும் போலீசார் வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்