கஞ்சா வைத்திருந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா வைத்திருந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2022-10-08 19:10 GMT

அறந்தாங்கி அருகே எல்.என்.புரம் 5-ம் வீதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 33). இவர் கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக அறந்தாங்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ராமநாதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமுவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி ராமநாதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததற்கான நகலில் அவரிடம் சிறையில் போலீசார் கையெழுத்து பெற்றனர். மேலும் அவரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்