கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;

Update: 2023-02-18 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட செந்தில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் வேல்சாமி (வயது 50). இவரை குடும்ப பிரச்சினை காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் அவருடைய மகனான சூர்யா (20) என்பவரை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை கலெக்டர் செந்தில்ராஜ் ஏற்று, சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் பாளையங்கோட்டை சிறையில் சமர்ப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்