கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;
நெல்லை மாவட்டம் அம்பை பெரியகுளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பட்டுராஜ் (வயது 39). கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பை அனைத்து மகளிர் போலீசார் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பட்டுராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அம்பை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று பட்டுராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை அம்பை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.