3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெண்கள் படத்தை அனுப்பி பணம் பறித்த வாலிபர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-02-10 19:05 GMT

நெல்லை மேலப்பாளையம் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்ற வழக்கு தொடர்பாக நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 26), பெருமாள்புரத்தை சேர்ந்த பச்சைக்கிளி (37) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

அதேபோன்று செல்போன் செயலி மூலம் பெண்கள் படத்தை சிலருக்கு அனுப்பி வைத்து, ஆசை வார்த்தை கூறி வரவழைத்து, பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறித்த செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முத்து (24) என்பவரை பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தனர். இதனை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஏற்று, 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் கிருஷ்ணகுமார், பச்சைக்கிளி ஆகியோரையும், நேற்று முத்துவையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பதற்கான ஆணையை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்