கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;

Update: 2022-12-13 19:13 GMT

திருச்சி சத்திரம் பஸ்நிலைய பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்த போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக உறையூர் பங்காளி தெருவை சேர்ந்த அபுதாகீர் (வயது 26) என்பவரை கடந்த மாதம் 17-ந்தேதி போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குண்டர் சட்டம்

இந்தநிலையில் அபுதாகீர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக 4 வழக்குகளும், ஒரு அடிதடி வழக்கு உட்பட 6 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும், அவர் தொடர்ந்து கஞ்சா விற்கும் எண்ணம் கொண்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அபுதாகீரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள அபுதாகீருக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்