இரட்டை கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

இரட்டை கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2023-06-10 18:49 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சக்தி (வயது 33), தேவக்கோட்டை அருகே உருவாப்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைதான 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்