ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;

Update: 2022-10-07 19:51 GMT

திருச்சி பெரியமிளகுபாறையை சேர்ந்த ரவுடி கோபால் என்கிற குஞ்சு கோபால் என்பவர் திருச்சி திண்டுக்கல் ரோடு வ.உ.சி தெருவில் டிபன் கடையில் வேலை செய்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500 பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் ரவுடி கோபால் என்கிற குஞ்சு கோபால் மீது கஞ்சா விற்பனை, பணம், நகையை பறித்ததாக 5 வழக்குகளும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் கொலை வழக்கு உள்பட 8 வழக்குகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 7 திருட்டு வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததது. மேலும், அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின் படி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ரவுடி கோபால் என்கிற குஞ்சு கோபாலிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்