கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவல பெருவிழா

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவல பெருவிழா நடைபெற்றது.;

Update: 2022-10-09 18:45 GMT

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள பிரகன்நாயகி, சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவல பெருவிழா நடைபெற்றது. கிரிவல பெருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 3 மணியளவில் கணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மாலை 4 மணிக்கு பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணியளவில் பவுர்ணமி கிரிவலம் தொடங்கி நடைபெற்றது. கிரிவலம் கோவிலில் தொடங்கி வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. கோவிலில் இரவு 7 மணியளவில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கிரிவல பெருவிழாவில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாமன்னன் இராசேந்திரசோழன் இளைஞர் அணியினர் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்