காஞ்சீபுரம் வினை தீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சீபுர வினை தீர்க்கும் விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிவடைந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.;
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைந்துள்ளது வினை தீர்க்கும் விநாயகர் கோவில். இந்த கோவிலுக்கு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் தங்களுடைய நோய்கள் தீர வேண்டி இங்குள்ள வினை தீர்க்கும் விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் திருப்பணிகள் முடிவடைந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துரத்தினவேலு, தலைமை ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் கல்பனா, அறநிலையத்துறை செயற்பொறியாளர் லால்பகதூர், காஞ்சீபுரம் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், பூவழகி, வேலரசு, சுரேஷ், மேலாளர்கள் சுரேஷ், மணிகண்டன், ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.