விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;

Update: 2022-06-28 19:43 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள இஷ்ட சித்தி சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. பின்னர் முதல் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று விநாயகர் பூஜை, சூரிய பூஜை, கோ பூஜை, பிம்பசுத்தி ஆகிய இரண்டாம் கால பூஜைகள் நடத்தப்பட்டு, கோவிலின் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்