விநாயகர் சிலை ஊர்வலம்
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.;
காட்டுமன்னார்கோவில்,
விநாயகர் சதுர்த்தியையொட்டி குமராட்சியில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ஜி. தமிழ்வாணன் தலைமை தாங்கினார். இதில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அப்துல்பாசித் என்பவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து விநாயகர் சிலை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள ராஜன் வாய்க்காலில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.