விநாயகர் சிலை ஊர்வலம்

கடையநல்லூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2023-09-20 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மேலக்கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால் குமார்தாபுரம், அச்சம்பட்டி உள்பட நகர் முழுவதும் 31 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று மதியம் அனைத்தும் சிலைகளும் மாவடிக்கால் மந்தை திடலுக்கு கொண்டு வரப்பட்டது.

பா.ஜ.க. வெளிநாடு மற்றும் வெளிமாநில பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக மேல கடையநல்லூர் சென்றடைந்தது. அங்கு சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அண்ணாமலை நாதர் குளத்திற்கு எடுத்து சென்று கரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா, விநாயகர் சதுர்த்தி விழா இணை ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், கண்ணாபாண்டியன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாரதிய மஸ்தூர் சங்க மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு தெய்வம், புளியங்குடி துணை சூப்பிரண்டு அசோக் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்