திருவாரூரில், விற்பனைக்கு தயார் நிலையில் விநாயகர் சிலைகள்

சதுர்த்தி விழாவையொட்டி திருவாரூரில், விற்பனைக்கு விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளது.

Update: 2023-08-22 18:45 GMT

சதுர்த்தி விழாவையொட்டி திருவாரூரில், விற்பனைக்கு விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகையாக இருந்து வருகிறது. விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, பின்னர் வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி நடக்கிறது. சதுர்த்தி விழாவிற்காக திருவாரூர் சேந்தமங்கலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை வடிவமைத்து வர்ணம் தீட்டி வருகின்றனர்.

விற்பனைக்கு தயார் நிலையில் சிலைகள்

இதற்கான பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு வண்ணங்களில் அனைவரும் கவர்ந்து இழுக்கும் வகையில் கிழங்கு மாவினை கொண்டு 10 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் தயரித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில தொழிலாளி புறான் கூறுகையில், நான் திருவாரூருக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகின்றது. சுவாமிகள் உள்பட அனைத்து விதமான பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதில் விநாயகர் சதுர்த்தி என்பது மிக சிறப்புக்குரியது.

ரசாயன பொருட்கள்

சதுர்த்தி விழாவிற்காக ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது. எளிதில் கரைய கூடிய வகையில் ரசாயன பொருட்கள் எதுவும் கலங்காமல் கிழங்கு மாவு கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றது.

கடந்த 3 மாதங்களாக இந்த பணி மேற்கொண்டு வருகிறோம். கை, கால், உடல், தலை என தனித்தனியாக தயாரித்து, அதனை இணைத்து விநாயகர் சிலை உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு சிலைகளும் ஒவ்வொரு வடிமைப்பில் உருவாக்கியுள்ளோம்.

நம்பிக்கை

திருவாரூர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சிலைகளை வாங்கி செல்கின்றனர். கடவுள் சிலைகள் எங்கள் குடும்பத்தினை பாதுகாத்து வருகிறது. இந்த ஆண்டு நிச்சயம் சிறப்பான விற்பனை நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

Tags:    

மேலும் செய்திகள்