விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.;

Update:2023-09-23 00:15 IST

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி, ராஜீவ்புரம், சிங்கனோடை, ஒழுகைமங்கலம் ஆகிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தனிதனியாக கடலில் கரைக்கப்பட்டன. பொறையாறில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர்அகோரம், துணைத் தலைவர் டி.ஜி.ஆர்.ஜெ.விஜயாலயன், நகர தலைவர் சாய் கிருஷ்ணன், மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ. அருட்செல்வன், பா.ஜனதா நிர்வாகிகள் ஜெயராமன், ரமேஷ், சிவகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்