விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

வீரகேரளம்புதூரில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-13 19:00 GMT

சுரண்டை:

வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் அழகப்பராஜா தலைமை தாங்கினார். சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன், ஊத்துமலை சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் முறைகள், இடம் தேர்வு செய்தல், வழிபாட்டு முறைகள், சிலைகள் கரைக்கும் முறைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.

இதில் சுரண்டை நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கஜேந்திரன், ஆலங்குளம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய ரூபி, பாரதீய ஜனதா கட்சி ஒன்றிய பொதுச் செயலாளர் பேச்சி முத்து, வீரகேரளம்புதூர் சின்னத்தம்பி மற்றும் நகராட்சி, உள்ளாட்சி, தீயணைப்பு, மின்சாரம், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்