மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் தெற்கு விஜயநாராயணம் தர்கா கந்தூரி விழா

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் தெற்கு விஜயநாராயணம் மேத்தப்பிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா நேற்று நடந்தது;

Update:2022-08-02 02:01 IST

இட்டமொழி:

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் தெற்கு விஜயநாராயணம் மேத்தப்பிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா நேற்று நடந்தது.

ேமத்தப்பிள்ளையப்பா தர்கா

நெல்லை மாவட்டம் தெற்கு விஜயநாராயணத்தில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக மேத்தப்பிள்ளையப்பா தர்கா அமைந்துள்ளது.

இந்த தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா ஆடி மாதம் 16-ந் தேதி நடைபெறுவது வழக்கம். ஆனால் தர்கா அமைந்துள்ள தெற்கு விஜயநாராயணத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் கூட கிடையாது. கந்தூரி விழாவில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்து வரும் முஸ்லிம்களை தெற்கு விஜயநாராயணத்தில் வசிக்கும் இந்து தேவர் சமுதாயத்தினர் தங்கள் இல்லங்களில் தங்குவதற்கு இடம் கொடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றனர். மேலும் கந்தூரி விழாவையும் முன்னின்று நடத்துகின்றனர்.

ெகாடியேற்றம்

இந்த நிலையில் நேற்று கந்தூரி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் கொடி ஊர்வலமானது மேத்தப்பிள்ளையப்பா பிறந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் திரளான முஸ்லிம்கள், இந்துக்கள் கலந்து கொண்டு முக்கிய தெருக்கள் வழியாக வந்தனர். பின்னர் தர்காவில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது. இந்த விழா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்