கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு: போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெறுகிறது.;

Update:2023-12-29 22:53 IST

சென்னை,

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி நடைபெறவுள்ள சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்