தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார வணிக வளமைய நிதிக்கடன் 6 பேருக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டிலும், ஒருங்கிணைந்த பண்ணைய நிதிக்கடன் 19 பேருக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 25 பேருக்கு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் திருமருகல் வட்டார ஆத்மக்குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், பாலமுருகன், தாசில்தார் ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.