அண்ணன் சாஸ்தா கோவிலில் பவுர்ணமி வழிபாடு
சியாத்தமங்கை அண்ணன் சாஸ்தா கோவிலில் பவுர்ணமி வழிபாடு;
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூர் கிராமத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி பஞ்சலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, தேன், திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சியாத்தமங்கை துண்டம்பாலூர் கிராமத்தில் உள்ள அண்ணன் சாஸ்தா கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திட்டச்சேரி வெள்ளத்திடலில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.