பவுர்ணமி வழிபாடு

பவுர்ணமி வழிபாடு

Update: 2023-08-30 18:45 GMT

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பகுதியில் வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமியையொட்டி நேற்று மாலை அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதபோல் வேதாரண்யம் நகர் மேலவீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் மாணிக்கவாசக சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்ப தேவன்காடு தெற்கு பகுதியில் உள்ள மவுன சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று பவுர்ணமியையொட்டி பக்தர்களே சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்தனர். தொடர்ந்து கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்