பவுர்ணமி சிறப்பு பூஜை

முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.;

Update: 2023-03-07 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

புளியங்குடியில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மாசி மாத பவுர்ணமி பூஜை, 1,008 பாலாபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி குருநாதர் சக்தியம்மா பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

முப்பெரும் தேவியர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர் நறுமண பொருட்கள் உள்ளிட்ட 21 வகை அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன், மாகாளியம்மன், பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்