மஞ்சக்குளத்து காளி கோவிலில் ஆடி பவுர்ணமி விழா

மஞ்சக்குளத்து காளி கோவிலில் ஆடி பவுர்ணமி விழா நடந்தது.

Update: 2022-08-11 18:38 GMT

திருப்புல்லாணியை அடுத்த ரெகுநாதபுரம் அருகே மேலவலசை கிராமத்தில் மஞ்சக்குளத்து காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி பவுர்ணமி நிகழ்ச்சியையொட்டி மஞ்சக்குளத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடந்தது. பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் வளையல் சூட்டப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பூஜகர் நாகநாதன் பூஜைகளை செய்தார்.

விழாவில், கோவில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை மஞ்சக்குளத்து மாரியம்மன் கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்