கல்வராயன்மலையில் இருந்துசாராயம் கடத்திய 4 பேர் கைது

கல்வராயன்மலையில் இருந்து சாராயம் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2022-12-21 18:45 GMT

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சேராப்பட்டு ரோடு சீவாத்துமூலை அருகே சந்தேகப்படும்படியாக வந்த 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மறித்தனர். அப்போது அந்த 4 மோட்டார் சைக்கிள்களிலும் 11 லாரி டியூப்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கிளாக்காட்டை சேர்ந்த அண்ணாமலை மகன் விஜய் (வயது 22), அண்ணாதுரை மகன் வரதராஜ் (26), வடமலை மகன் அருண் (20), கள்ளிப்பாறையை சேர்ந்த ராமன் மகன் சிவக்குமார் (25) ஆகியோர் என்பதும், கிளாக்காட்டில் இருந்து புதுப்பட்டு கிராமத்திற்கு சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், 605 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்