சிறை கைதிக்கு கஞ்சா கொடுக்க முயற்சி... காவலரிடம் சிக்கிக்கொண்ட நண்பர்கள்

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2024-01-03 17:18 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னை புழல் சிறையில் கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவத்தில், கைதி, பார்வையாளர்கள் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேஷ் என்பவரை சந்திக்க, அவரது நண்பர்கள் 3 பேர் சிறைக்கு வந்தனர். அப்போது, பப்பிள்கம்மில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை ராஜேஷிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர் கையும் களவுமாக பிடித்தார். இதையடுத்து கைதி ராஜேஷ், நண்பர்களான கார்த்திக் ராஜா, சூரியமூர்த்தி, சிலம்பரசன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்