கள்ளத்தொடர்பு தகராறில் நண்பர் கொலை: ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு

மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.;

Update: 2022-06-30 05:17 GMT

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் தங்ககுமார் (வயது 29). அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது நண்பர் கார்த்திக்ராஜா (26). இவர் தங்ககுமார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில் அவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்திரமடைந்த தங்ககுமார், கடந்த 2015-ம் ஆண்டு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் குடிபோதையில் இருந்த கார்த்திக்ராஜா மீது கல்லை போட்டு கொலை செய்தார். இந்த வழக்கில் தங்ககுமாரை அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் தங்ககுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கொலையாளியான அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலுல், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்ககுமாரை போலீசார் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் புரட்சிதாசன் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்