கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்

கம்பத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரியின் சொத்துக்களை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.;

Update:2022-06-29 20:43 IST

கம்பம் கோம்பை சாலையை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரை கஞ்சா கடத்திய வழக்கில் தேனி போதைப்பொருள் போலீசார் சமீபத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கிய அவருடைய சொத்துக்களை முடக்க கூடுதல் டி.ஜி.பி. (குற்றம்) மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதையடுத்து தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார், கஞ்சா வியாபாரி மலைச்சாமியின் சொத்து விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து அவருக்கு சொந்தமான சுமார் 15 செண்ட் நிலம், வங்கிக் கணக்கு ஆகியவற்றை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.13 ஆயிரத்து 952 இருந்தது. அந்த வங்கிக் கணக்கு மற்றும் நிலம் ஆகிய சொத்துக்கள்  முடக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்