இலவச வேட்டி-சேலைகளை உடனடியாக வழங்க வேண்டும்

ரேஷன் கடைகளில் உள்ள வேட்டி- சேலைகளை, குடும்ப அட்டைதாரர்களுக்கு உடனடியாக வழங்க கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-16 18:08 GMT

ரேஷன் கடைகளில் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று ராணிப்பேட்டை சிப்காட், பெல் அண்ணா நகர், சிப்காட், நரசிங்கபுரம் மற்றும் ராணிப்பேட்டை நகராட்சி பாரதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து கடைகளுக்கு வருகை தந்திருந்த பொது மக்களிடம் பொருட்கள் முறையாக கிடைக்கிறதா?, பொருட்களின் தரம் எவ்வாறு உள்ளது என கேட்டார். அதற்கு பொருட்கள் கிடைக்கிறது. கோதுமை போதிய அளவில் கிடைப்பதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, கோதுமை ஒவ்வொரு கடையிலும் போதுமான அளவு இருக்கிறதா என்பதை அறிந்து அதனை உடனடியாக பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

இலவச வேட்டி-சேலை

மேலும் ரேஷன் கடைகளில் இலவச வேட்டி- சேலை இருந்ததை பார்த்து உடனடியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட உத்தரவிட்டார். தொடர்ந்து பொருட்களின் இருப்பு, விற்பனை குறித்து, செல்போன் எண் வாயிலாக அறிந்து, பொருட்களின் இருப்பு, எடையை அளவிட்டு சரி பார்த்து உறுதிப்படுத்தினார். இந்த ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் நடராஜன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்