மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை

மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.;

Update: 2023-09-01 19:33 GMT

சிவகங்கை,

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்காக கட்டணமில்லா பயண அட்டை வழங்கும் விழா கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து வரவேற்று பேசினார்.

விழாவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான கட்டணமில்லா பயண அட்டைகளை வழங்கி கலெக்டர் ஆஷா அஜீத் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் காரைக்குடி மண்டலத்திற்கு உட்பட்ட சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் கட்டணமில்லா பயணம் செய்வதற்கு ஏதுவாக சிவகங்கை மாவட்டத்தில் 13,061 மாணவ-மாணவிகளுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 9,924 மாணவ-மாணவிகளுக்கும் என மொத்தம் 22,985 மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான கட்டணமில்லா பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய பள்ளிகளில் காரைக்குடி மண்டலத்தில் உள்ள 2 கோட்ட மேலாளர்கள், 11 கிளை மேலாளர்கள் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதுநாள் வரை கட்டணமில்லா பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கோட்ட மேலாளர் தங்கபாண்டியன், பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்