வெள்ளாடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி
வெள்ளாடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடந்தது.;
மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் ஆடுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, ஆடுகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில், கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக நாளைமறுநாள் காலை 10.30 மணிக்குள் ஆராய்ச்சி மைய வளாகத்திற்கு வரவேண்டும். மேற்கண்ட தகவலை மையத்தின் பேராசிரியரும், தலைவருமான அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.