விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 30-ந் தேதி தொடங்குகிறது

விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 30-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2023-08-25 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித்தேர்வில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 8.8.2023 அன்று 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளில் 3,359 பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இலவச பயிற்சி வகுப்பு

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 30-ந் தேதியன்று மதியம் 2 மணியளவில் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் 28-ந் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்