குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
நெல்லையில் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 28-ந்தேதி தொடங்குகிறது;
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 5,413 காலி பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப்-2 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்று முடிந்தது. தற்போது அதற்கான முதன்மை தேர்வு வருகிற 25-2-2023 அன்று நடைபெற உள்ளது. இதற்கு தகுதி பெற்ற தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட தேர்வர்கள் இந்த முதன்மை தேர்வுக்கு தயாராகும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இங்கு வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மாதிரி தேர்வின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வர்களுக்கு முறையான பின்னூட்டம் வாரந்தோறும் தரப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வின் ஹால் டிக்கெட் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வருகிற 28-ந்தேதி காலை 10 மணிக்கு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.