கடலூரில்கிரிக்கெட் வீரர்களுக்கான இலவச பயிற்சி முகாம்அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது
கடலூரில் கிரிக்கெட் வீரர்களுக்கான இலவச பயிற்சி முகாம் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது.;
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்துக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான இலவச பயிற்சி முகாம் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. பயிற்சி முகாம் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் ராகுல் பயிற்சி அளிக்கிறார். கிரிக்கெட் வீரர்கள் 19 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியின் போது வெள்ளை நிற உடையும், வெள்ளை நிற காலணியும் அணிந்து வர வேண்டும். கடலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். பயிற்சி முகாமிற்கு கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்குகிறார். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் -9842309909 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.