50 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 50 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது

Update: 2022-09-21 18:45 GMT

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 50 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சிக்கு உட்பட்ட திருக்கண்ணபுரம், ராமநந்தீஸ்வரம், காக்கமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை-எளிய, நடுத்தர பெண்கள் 50 ேபருக்கு தினமும் 5 பேர் வீதம் இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் சாம்பிராணி தயாரித்தல், அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு குறித்தும் கற்று கொடுக்கப்படுகிறது. இதில் பயிற்சியாளர் ஜெயந்தி, வார்டு உறுப்பினர் ஆல்பர்ட் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்