இலவச மருத்துவ முகாம்

கோவில்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2023-05-14 19:00 GMT

கோவில்பட்டி:

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொதுநல மருத்துவமனை, நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமை நடத்தின.

பொதுநல மருத்துவமனை தலைவர் டி.கே.டி. திலகரத்தினம் தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் ஆர்.ஏ.அய்யனார், மருத்துவமனை செயலாளர் எம்.தங்கராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். முகாமை நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கா.கருணாநிதி தொடங்கி வைத்தார்.

டாக்டர்கள் சாரங்கபாணி, ஜெய செல்வராணி, பாலசுப்பிரமணியன், வேலம்மாள், கமலா சுதன், காளியம்மாள், சோபனா, ரஞ்சிதா ஆகியோர் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனைகள் வழங்கினா். 

Tags:    

மேலும் செய்திகள்