காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது;
காரைக்குடி
காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மானகிரி அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ குழுவின் சார்பில் தொழில் வணிக கழக அலுவலக வளாகத்தில் நிர்வாக அதிகாரி செல்வகுமார் லாவண்யா ஏற்பாட்டில் நடைபெற்றது. முகாமில் மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ராகுல், நாராயணன், சக்கரவர்த்தி, ஆசை செல்வன் ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் நடத்தி மருத்துவ ஆலோசனை வழங்கினர். முகாமிற்கு வந்த அனைவருக்கும் ரத்த அழுத்தம், இ.சி.ஜி., எடை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் இலவசமாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தொழில் வணிக கழக தலைவர் சார்பில் திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், பொருளாளர் சரவணன் துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, அப்பல்லோ மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் ஹரி, சாய் தர்மராஜ், முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.