இலவச மருத்துவ முகாம்
சுரண்டை நகராட்சி பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
சுரண்டை:
சுரண்டை புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் சுரண்டை நகராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நகராட்சி பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார் மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஜோசப்ராஜன் கலந்து கொண்டார். சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.அருள்ஜோதி தலைமையில் மருத்துவ குழுவினர் இலவச பரிசோதனை மேற்கொண்டனர். சுகாதார ஆய்வாளர் பால சுப்பிரமணியன், நகராட்சி கவுன்சிலர் அந்தோணி சுதா, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஊத்துமலை பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.