சேமிப்புப்பழக்கத்தை ஏற்படுத்த சிறுவர்களுக்கு இலவச உண்டியல்
சேமிப்புப்பழக்கத்தை ஏற்படுத்த சிறுவர்களுக்கு இலவச உண்டியல்;
வெள்ளகோவில்
வெள்ளகோவில் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சேமிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த பள்ளிகள் தோறும் தன்னார்வு அமைப்பினர் இலவசமாக உண்டியல்களை வழங்கி சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து வருகின்றனர். தற்போது நாளுக்குநாள் சேமிப்பு பழக்கம் குறைந்து வருகின்றன. இதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு உண்டியல்களை வழங்கி வருவதாக தன்னார்வ அமைப்பினர் கூறினர்.
-------