172 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

172 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

Update: 2023-02-12 18:45 GMT

நாகை மாவட்டத்தில் 172 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

இலவச வீட்டுமனைப்பட்டா

நாகை கலெக்டர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். விழாவில் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சியில் 22 பயனாளிகளுக்கும், நாகை நகராட்சி சூர்யா நகர் பகுதியில் 60 பயனாளிகளுக்கும், அந்தணப்பேட்டை ஊராட்சியில் 90 பயனாளிகளுக்கும் என மொத்தம் 172 பயனாளிகளுக்கு வருவாய் துறை சார்பில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாவினை கலெக்டர் வழங்கினார். இதில் நகர மன்ற தலைவர் மாரிமுத்து, தாசில்தார் ராஜசேகரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வு

முன்னதாக வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சி பாப்பிரெட்டி குத்தகை கிராமத்தில் செல்லியம்மன் கோவில் முதல் மருதூர் தெற்கு வரை உள்ள பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 25.5 லட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு

ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் தெற்கு முட்டகம் வரை ரூ.23.50 லட்சம் மதிப்பீட்டிலும், தென்னடார் ஊராட்சியில் மேலக்காட்டில் ரூ.49.80 லட்சம் மதிப்பீட்டிலும் நடந்து வரும் சாலை பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாய்மேடு ஊராட்சியில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 15-வது மானிய நிதியின் கீழ் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டும் பணிகள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டடம் கட்டும் பணிகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

2 புதிய வகுப்பறை கட்டும் பணிகள்

வண்டுவாஞ்சேரி ஊராட்சி வெள்ளிக்கிடங்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள், ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி, தாணிக்கோட்டகம் ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல்

நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜூ, பாஸ்கர், ஊராட்சி தலைவர்கள் மலர் மீனாட்சிசுந்தரம், தேவி செந்தில், சத்யகலா செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்