கோவில்பட்டியில்இலவச கண் சிகிச்சை முகாம்
கோவில்பட்டியில்இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப் பள்ளியில் புத்துயிர் ரத்ததான கழகம் மற்றும் கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து 150-வது இலவச கண் சிகிச்சை முகாமை நேற்று நடத்தின. முகாம் தொடக்க விழாவிற்கு ரத்ததான கழகச் செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். முகாமை ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் தொடங்கி வைத்தார். முகாமில் சங்கரா கண் மருத்துவமனை தலைமை டாக்டர் சபேதா தலைமையில் மருத்துவ குழுவினர் 60 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 18 பேர் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.நிகழ்ச்சியில் புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.