இலவச கண் சிகிச்சை முகாம்
சுரண்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
சுரண்டை:
சுரண்டையில் நகராட்சி தலைவர் வள்ளி முருகன் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் முரளிராஜா, நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழனிநாடார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 120 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 36 பேர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் வே.ஜெயபாலன், வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், மிளகாய் வத்தல் வியாபாரி சங்க பொறுப்பாளர் எஸ்.எம்.டி.ரத்தினசாமி, காமராஜர் தினசரி மார்க்கெட் வியாபாரி சங்க தலைவர் சேர்மசெல்வம், நகர காங்கிரஸ் பிரதிநிதி சமுத்திரம், நகராட்சி கவுன்சிலர்கள் அமுதாசந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, பூபதி செல்லத்துரை, ஜெயராணி வள்ளி முருகன், கல்பனா அன்னபிரகாசம், உஷாபிரபு, செல்வி, ரமேஷ், சாந்தி பட்டு முத்து, மாரியப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், பிரபாகர், பிரபு, கந்தையா, மகேஷ், பாலகணேஷ்சங்கர், பிரபாகரன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.