இலவச கண் சிகிச்சை முகாம்

விளாத்திகுளம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

Update: 2022-10-17 18:45 GMT

விளாத்திகுளம் அருகே வேம்பார் புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளியில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுண்டேசன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேம்பார் கிளை, தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. முகாமில் 126 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 59 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 20 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

முகாமில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுண்டேசன் நிர்வாக அதிகாரி சவுந்திர பாண்டியன், குருவானவர் டைட்டஸ் ரோஷன், தலைமை ஆசிரியை பெல்சிட்டா மேரி, ஆசிரியர் ரவீந்திரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மேலாளர் அய்யப்பன் செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்