இலவச கண் பரிசோதனை முகாம்
செங்கோட்டை அருகே இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள வல்லம் நேஷனல் பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனம் நெல்லை கிளை மற்றும் நேஷனல் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனத்தின் 75ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம், ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணப்பொருட்கள் வழங்கல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு தென்காசி யூனியன் தலைவா் ஷேக்அப்துல்லா தலைமை தாங்கினார். பட்டயக்கணக்காளா்கள் நிறுவன மாவட்ட துணைத்தலைவா் பாத்திமா பிர்தௌஸ், நேஷனல் கல்வி அறக்கட்டளை தாளாளா் அப்துல்மஜீத், அகர்வால் கண்மருத்துவமனை முதன்மை முகாம் மேலாளா் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் சித்திகாபர்வீன் வரவேற்றார். அதனைதொடா்ந்து ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணப்பொருட்களை தென்காசி யூனியன் தலைவர் வழங்கி வாழ்த்தி பேசினார். அதனைதொடா்ந்து இலவச கண்பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவன நெல்லை மாவட்ட தலைவா் வெங்கடாசலம், செயலாளா் அகதாஜேக்கப், பொருளாளா் சிவசங்கர், அகர்வால் கண்மருத்துவமனை விழிஒளி ஆய்வாளா் சிஞ்சு, உதவி விழிஒளி ஆய்வாளா்கள் ஷப்னா, நப்யா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருந்து, கண் கண்ணாடி, மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனா்.