இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-19 19:00 GMT

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் உத்தரவின்பேரில் அரியலூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டிகளுக்கான "சாலை பாதுகாப்பு வாரம் 2023" கடைப்பிடிப்பதற்காக 200 வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர். மருத்துவர்களிடம் பார்வையில் கிட்ட குறைபாடு, தூர குறைபாடு, கலர் பிளைன்ட்னெஸ், கண்புரை உள்ளிட்ட நோய்கள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 50 டிரைவர்களுக்கு உடல்நலக்குறைவு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இலவச கண்ணாடி வழங்கப்பட்டது. அரியலூர் போக்குவரத்து காவல் துறை மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், அரியலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்