இலவச கண் பரிசோதனை முகாம்
செங்கோட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.;
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு நூலகத்தில் நூலக வாசகர் வட்டம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, அரசமரம் கண் குறைபாடு மற்றும் கண் பார்வையற்றோருக்கான சேவை அமைப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம், சுபம் பல் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. அரசமரம் கண் குறைபாடு மற்றும் கண் பார்வையற்றோருக்கான சேவை அமைப்பு நிறுவனர் மன்சூர் அலி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ஜவஹர்லால்நேரு, பொருளாளர் ஆறுமுகம், நூலக வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ்தாசன் சுதாகர், நூலகர் ராமசாமி, டாக்டர் சபானா ஆகியோர் கலந்து கொண்டனர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.