விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது;
சிக்கல்:
நாகை மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமன் தலைமை தாங்கினார். சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 186 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜா, துணைத் தலைவர் பகுருதீன், ஊராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், உதவி தலைமை ஆசிரியர் ஒப்பிலியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.