விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள்

வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

Update: 2023-01-25 18:25 GMT

வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

தெள்ளார் ஒன்றியத்தில் 15 கிராமங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தத்தெடுக்கப்பட்ட கோதண்டபுரம் கிராமத்தில் தெள்ளார் வேளாண்மை விரிவாக்க நிலையம் சார்பில் 300 விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் கண்ணகி தலைமை தாங்கினார். கோதண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் காளிதாஸ் முன்னிலை வகித்தனர். தெள்ளார் வேளாண்மை துறை உதவி இயக்குனர் குமரன் வரவேற்றார். இதில் ்வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் ரவிக்குமார், செந்தில் குமார், ஷங்கர், முன்னோடி விவசாயி ரேணுகோபால் கலந்து கொண்டு 300 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினர்.

இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு விவசாயிகளுக்கு மானிய விலையிலும் முழு மானியத்துடனும் பருவ காலத்துக்கு தகுந்தால் போல் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை, தண்ணீர் பரிசோதனை செய்யப்படும் என்றும், முழு மானியத்துடனும் மினி கட்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்