காவலர்-தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
காவலர்-தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடத்திற்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 12-ந் தேதி முதல் தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9080182131 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.