மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

Update: 2022-09-22 18:45 GMT


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) மற்றும் பாரத ஸ்டேட் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வருகிற 26-ந்தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் தொடங்க உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மேற்குறிப்பிட்ட பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேற்காணும் பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள இளைஞர்கள் https://ssc.nic.in, www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்